Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எழுதுகோலால் தமிழரின் தாகம் தணிக்க எழுந்து நின்ற மாணவச்சமூகத்திற்கு தெய்வங்களாக இருக்கவேண்டிய ஆசிரியர்கள், தமது பணியை மறந்து எமது சமூகத்தைச் சீரழிக்கும் இழிவெண்ணத்துடன் எமது வீரபூமியில் உலவி வருகின்றனர். அவர்கள் அனைவரும் விரைவில் தண்டிக்கப்படவுள்ளதாக மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று எமது இன அழிப்பை நிகழ்த்துவதற்கான திட்டத்தை, எமது தேசத்தின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் யாழ் மண்ணிலே தேசவிரோத சக்திகள் அதிகளவில் அரங்கேற்றி வருகின்றனர்.

எமது மண்ணின் பலம் சீரிய கல்வியும் ஒழுக்கமும் என்பது உலகளாவியரீதியில் வியப்புடன் பாராட்டப்படுகிறது. நமது மக்கள் உறவுகளை, உடமைகளை இழந்து இருப்பிடம் விட்டு அகதிகளாக அலையும் போதும் அவர்கள் புத்தகப்பையையும் உணர்வையும் இழக்கவில்லை

எழுதுகோலால் தமிழரின் தாகம் தணிக்க எழுந்து நின்ற மாணவச்சமூகத்திற்கு நமது ஆசிரியத் தெய்வங்கள் தம்மையே அர்ப்பணித்து ஊண் உறக்கமின்றி உதவி செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் கோபுரங்களாக வீற்றிருக்கின்றனர். ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் காத்திரமான பணி ஆசிரியர்களிடமே உள்ளது.

நல்லொழுக்கமுள்ள, திறன்மிக்க, வலிமையுடைய சமுதாயத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்களால்த்தான் முடியும். உலகிலேயே எங்குமில்லாத முக்கியத்துவத்தை கல்விக்காக கொடுக்கும் யாழ் சமுதாயம் ஆசிரியர்களை உயரிய இடத்தில் வைத்திருக்கிறது.

சந்ததியை உருவாக்கும் உன்னத நிலையில் இருக்கும் ஆசிரியப்பணியை மறந்து எமது சமூகத்தைச் சீரழிக்கும் இழிவெண்ணத்துடன் சீர்கெட்டவர்கள் சிலர் ஆசிரியர் என்ற நாமத்தைக் கொச்சைப்படுத்தும் பாங்கில் எமது வீரபூமியில் உலவி வருகின்றனர்.

பெண்களைத் தெய்வங்களாகப் பார்க்கும் எமது மண்ணிலே, சக ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் மீது தகாத முறையில் நடந்துகொள்வது, அங்கச்சேட்டை செய்வது போன்ற அரக்க வேலைகளைச் செய்கின்றனர். வப்புத்தனமான பிரச்சாரங்களை தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர். தட்டிக்கேட்க ஆளில்லை என நினைத்து இந்த மானம் கெட்டவர்கள் தமது லீலைகளைச் செய்துவருகின்றனர்.

இதுவரைகாலமும் கேவலம்புரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் எனப் பலரும் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்.

முதற்கட்டமாக, கொக்குவில் இந்துக் கல்லூரியின் உப அதிபரும், நிரு கல்வி நிறுவன இயக்குனருமான வேலாயுதபிள்ளை என்பவர் சிறு தண்டனைக்குள்ளாகிறார்.

இவரது முகமூடி கிழித்தெறியப்படும் காலமாக இது அமையும்.

மாணவர் பிரிவு

0 Responses to கலாசார சீரழிவில் ஈடுபடுபவர்களுக்கு மாணவர் அமைப்பு எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com