ஆழிப்பேரலையில் ஆன்மாவைத் தொலைத்த ஆத்மாக்களை மனதில் நிறுத்தி, நெகிழும் நாள் 26.12.2009. அன்றைய தினம் ஆலன் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் அருட்தந்தை றிக்ரர் தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற ஆழிப்பேரலை இறைவழிபாட்டில் நூற்றுக்கணக்கான ஆலன் புலன்பெயர் தமிழ் உறவுகளும் ஜேர்மனியினரும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 11.15 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி ஊர்வலம் ஆலய முன்றலிருந்து ஆரம்பமாகி, நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழிப்பேரலை நினைவுத் தூபியை 11.30 க்கு வந்தடைந்தது.
இத் தூபியானது ஆலன் நகரசபையால் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரத்தின்கீழ் அமைந்திருந்ததும் பேரலையின் அவலங்களை சித்தரிக்கும் வண்ணப் படங்கள,; பதாதைகள் அம்மரத்தின் கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்த செயற்பாடானதும் அனைவரையும் கவர்ந்திருந்தது.

0 Responses to ஆழிப்பேரலை ஐந்தாவது அகவை நினைவு நிகழ்வு: யேர்மனி