Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜபக்சேவின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துவேன் என்று இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடப் போவதாக இலங்கையின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்பு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. சரத் பொன்சேகா கலந்து கொண்டு பேசுகையில்,

'இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சிகாலத்தில் நடந்த முறைகேடுகளையும், ஊழல்களையும், அட்டூழியங்களையும் அம்பலப்படுத்துவேன்.

முன்பு நான் ராணுவத்தின் உயர் பதவியில் இருந்ததால் அவரது செயல்பாடுகளை தடுக்க முடியாமல் அமைதியாக இருக்க நேர்ந்தது. எனினும் எனக்கும் அவருக்கும் இடையே மிகுந்த கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் பதவி காரணமாக அப்போது நான் எதையும் பேசவில்லை.

ராஜபக்சேவின் நிர்வாகத்தில் அளவுக்கு மீறிய ஊழல் நிறைந்து இருந்தது. மக்கள் பொங்கி எழுகிற அளவுக்கு அவரது ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் நடந்தன. அவற்றையெல்லாம் நான் வெளியிடுவேன். அவர் செய்த பல்வேறு பாவச்செயல்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் மதித்து அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று நான் உங்களிடம் உறுதி அளிக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் இலங்கையை ஒரு சுதந்திர நாடாக உயர்த்த வேண்டும் என்பது தான்.
இங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழவும், சிங்கள மொழியை தாய்மொழியாக பேசவும் நடவடிக்கை எடுப்பேன். ராஜபக்சே மக்களிடம் மாயவித்தை காட்டுகிறார். அவரது நிர்வாகம் எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது' என்றார் பொன்சேகா.

0 Responses to ராஜபக்சேவின் ஆட்டூழியங்களை அம்பலப்படுத்துவேன்- பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com