Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிபர் தேர்தலி்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், அக்கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன், திடீரென சரத் பொன்சேகாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார் சம்பந்தன். இந்த நிலையி்ல தற்போது எதிர்தரப்பு வேட்பாளரான பொன்சேகாவையும் அவர் சந்தித்துள்ளார். இரு தரப்பினரிடமும் பேசுவது என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பொன்சேகாவை சந்தித்துப் பேசினார் சம்பந்தன்.

சிறுபான்மையினரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அவர்களின் உடனடிப் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து இரு முக்கிய வேட்பாளர்களின் நிலைப்பாட்டையும் அறிந்த பின்னர் தங்களது முடிவை எடுக்க தீர்மானித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பினர் கூறுகையில், தற்போதைய நிலையில், தமிழ் மக்களின் ஆதரவின்றி எந்த வேட்பாளரும் வெல்ல முடியாது என்ற நிலைமை உறுதியாகி வருகிறது. இந்தச் சூழலில் எங்களுக்கு (தமிழர்களுக்கு) என்ன நியாயத்தைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இரு தரப்புகளும் தத்தமது நிலைப்பாட்டைக் கூறுவதற்கு, விஷயங்களை "கக்குவதற்கு" இடமளித்துப் பார்த்திருப்போம். உரியவேளை வரும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வோம். இப்போது அவசரப்பட்டு முடிவு எடுப்பதற்கு எதுவும் இல்லை என்று உதயன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அடுத்து ரணில் விக்கிரமசிங்கேவையும் சம்பந்தன் சந்திப்பார் என்று தெரிகிறது.

பொன்சேகா - சம்பந்தன் சந்திப்பின்போது என்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இருப்பினும் சம்பந்தன் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
ஈழத்மிழர்ளுக்கு யார் அதிக ஆதவாக நடந்து கொள்கிறார்களோ அவர்ளுக்குத்தான் வரும் அதிபர் தேர்தலில் ஆதளிப்போம்.

தேர்தலில் ஆதரவு என்பது மிக முக்கிமான விவகாரம். இதனால் இதுகுறித்து அவமாக முடிவெடுத்திட முடியாது. அதிபர் தேர்லுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறன்றன. இதனால் நிதாமாக முடிவெடுக்கப்டும். இதுகுறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.

ஆதளிப்தற்கு முன்பு நன்கு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்தையும் கருத்தில் வைத்துதான் ஆதரவு குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றார்.

இக்கூட்டமைப்பின் எம்.பிக்களில் ஒருவரான பிரேமச்சந்திரன் கூறுகையில்,

ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி,​ வரும் அதிபர் தேர்தலில் தங்ளுக்கு ஆதளிக்குமாறு தமிழ் தேசிய கூட்மைப்பிடம் கோரியிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் கோரிக்கை பரிசீலிக்கப்டும் என்றார்.

இலங்கை அதிபர் தேர்தலி்ல ராஜபக்சே மற்றும் பொன்சேகா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் பெருமளவில் வாக்குகள் பிரியும் என்பதால் தமிழர்களின் ஆதரவைப் பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சேவும், பொன்சேகாவும் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பொன்சேகாவுடன் திடீர் சந்திப்பு சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com