Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்பான கனடா வாழ் தமிழீழ மக்களே!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி கனடாவில் எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது. தமிழீழதாகத்தை உலகிற்கு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி எடுத்துரைக்கும் நாள் அதற்கான எமது உறுதிப்பாட்டை நடைபெறும் வாக்களிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து உலகிற்கு நிரூபிக்கும் நாள்.

போராட்டவடிவங்கள் மாறும் ஆனால் இலட்சியம் மாறாதுஎன்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய, நோர்வே நாட்டில் கடந்த மே மாதத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் படு கொலைகளுக்குப் பின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனித் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பிரான்சில,; பிராந்தியவாரியாக டிசம்பர் மாதம் 12ம் 13ம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ் மக்களில் 33000அதிகமான மக்கள் மீண்டும் ஒரு முறை இந்த சர்வதேசத்திற்கு தனித் தமிழீழமே தமிழர்களுக்கான ஒரே தீர்வு என ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.

1948 ம் ஆண்டு இலங்கைதீவு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அந்ந மண்ணின் பூர்வீகக் குடிகளான தமிழ்மக்களாகிய எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் போராடியதும், அதனை சிறீலங்கா பேரினவாத அரசுகள் வன்முறைமூலம் எமது போராட்டத்தை ஒடுக்கியதால் 1976ம் ஆண்டிலிருந்து எமது உரிமையை மீட்டெடுப்பதற்காகவும், எமது அடையாளங்களை காப்பதற்காகவும் ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களின் பேராதரவுடனும், அர்ப்பணிப்புடனும் ஆரம்பிக்கப்பட்டது.

நேர்த்தியான தலைமையினாலும, உயிர் அர்ப்பணிப்பினாலும் மண்ணின் மானம் காக்க எதையும் இழக்கத் தயாரான சந்ததியின் போராட்டத்தை சர்வதேசம் பயங்கரவாதம் என்கின்ற முத்திரையைக் குத்தி இன்று அதை இல்லாதொழித்துள்ளது.

இந்த வகையில் தான் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப்பெற ஐனநாயகவழியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஏற்று இறைமையுள்ள தமிழீழ தாயகத்தை நிறுவுவதோடு தமிழரின் பாரம்பரிய கொடியான புலிச்சின்னத்தை கொண்ட கொடியே தமிழரின் தேசியக்கொடி என்ற கொள்கையோடும் செயற்படுவதோடு எமது தேசிய ஆன்மாவின் சிந்தனையானபோராட்டவடிவங்கள் மாறும் ஆனால் இலட்சியம் மாறாதுஎன்பதற்கு அமைய நாம் ஒவ்வொருவரும் எமது கடமையை உணர்ந்து செயற்படுவோம்.

அன்பான கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளே! வட்டுக்கோட்டைத் தீர்மான கருத்துக் கணிப்பு வாக்களிப்பில் அமோகமாக வெற்றியீட்டியவர்கள் என்றதின் படி, எதிர்வரும் 19ம் திகதி கனடா தழுவிய ரீதியில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி நடைபெறவுள்ள வாக்கெடுப்பு நிகழ்வில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கு கொள்ள வேண்டும் என உங்களை அன்புடனும், பணிவுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

உலகத்தின் கையில், தமிழர் விருப்பு என்னவென்று கூறும் கடமை இன்று உங்கள் கையில். இந்த ஜனநாயக விருப்பினைக் கூறி, மக்கள் போராட்டத்தை உலகுக்கு காட்டுங்கள்.

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை.

0 Responses to கனடாவாழ் ஈழத்தமிழ் உறவுகளுக்கு, பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் அன்பான வேண்டுகோள்.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com