"ரெலோ" எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் விலகியுள்ளனர் எனக் கட்சியின்..
செயலாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தன்னிச்சையாகப் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் ஸ்ரீகாந்தா குழு தயாரானமையை அடுத்து அவர்கள் இரு வரையும் சமாதானப்படுத்தி அந்த முயற்சியைக் கைவிட வைக்கும் எத்தனமாக நேற்று முன்தினம் இரவு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
தலைமையில் ரெலோவின் கூட்டம் ஒன்று கொழும்பில் நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
எனினும், அந்த முயற்சி பலன்தரவில்லை என்றும், தனித்துத் தேர்தலில் போட்டியிடுவதில் அவர்கள் உறுதியாகவிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய பேச்சுக்களின் நடுவில் சிவாஜிலிங்கம் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடுவதற்குக் கட்சி அனுமதிக்காவிட்டால், கட்சியிலிருந்து தாங்கள் இருவரும் விலகவும் தயார் என அந்த இருவரும் குறிப்பிட்டனர் எனக் கூறப்பட்டது. ஆனாலும் தாம் "ரெலோ"வின் முதல்வராக உள்ள நிலையில் தாம் கட்சியிலிருந்து பதவி விலகவேண்டிய தேவை எழவேயில்லை என்று சிவாஜிலிங்கம் கூறினார் என இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவித்தது.

0 Responses to சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் ரெலோவிலிருந்து வில(க்)கல்?