Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலம் எதனையும் தாங்கள் மீட்கவில்லை என்றும் இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாக உலாவும் துவாரகாவின் சடலம் எனப்படுவது சிறிலங்கா இராணுவத்தினாரால் மீட்கப்பட்டதன்று என்றும் சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளின் சடலம் என்ற பெயரில் அண்மையில் இணையங்களில் உலாவும் படம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவிக்கையில் -

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில் அவரது மூத்த மகனான சார்ள் அன்ரனியை தவிர வேறு எவரது சடலத்தையும் இராணுவத்தினர் மீட்கவில்லை. கடந்த மே மாதம் இடம்பெற்ற போரில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட பெண்களின் சடலங்களில் துவாரகவை போல எவரது சடலத்தையும் மீட்கவில்லை. இணையத்தளத்தில் தற்போது உலாவரும் படத்துக்கு ஒப்பான சடலத்தையும் இராணுவத்தினர் இதுவரை மீட்டதில்லை - என்றும் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளின் சடலம் என்ற பெயரில் இரத்த காயங்களுடன் ஒரு பெண்ணின் படம் அண்மைக்காலமாக இணையங்களில் உலாவருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரபாகரனின் மகளின் சடலத்தை இராணுவம் மீட்கவில்லை: சிறிலங்கா இராணுவம் மறுப்பு தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com