Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழீழ மக்களுக்கு, தமிழீழ மக்கள் பேரவையின் 12ம்,13 ம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களின் வரலாற்று பதிவான தமிழீழமே தமிழ்மக்களின் தீர்வு என்ற கருத்துக்கணிப்பு தேர்தலின் அறிக்கையும், வேண்டுகோளும்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

எமது தமிழீழ மக்கள் தமது தாயகத்தையும் அதன் விடுதலையையும் நோக்கி பயணிக்க தொடங்கி இன்று 62 வருடங்களாகிவிட்டன. சமத்துவம், சமஸ்டி, என்ற பேச்சுவார்தைகள் மூலமாக கேட்டதும், அதன் பின் சிங்கள அரசு தமது அதிகாரத்தை தம்கையில் வைத்துக்கொண்டு அந்த சனநாயகத்தை வைத்து இனவெறி அரசியலில் ஈடுபட்ட போது, தமிழர்களும் தமது சனநாயகத்தை தம் கையில் எடுத்து 1977ல் தனித்தமிழீழ கோட்பாட்டிற்கு வாக்களித்தார்கள்.

அந்த நேரத்தில் இனவெறியாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தை கையில் எடுத்தார்கள். அந்நிய அரசியலில் எமது போராட்டம் பின்னப்பட்டு, சிதைக்கப்பட்ட நிலையில் இந்த உலகுக்கு காட்டு முகமாக நாம் மீண்டும் எமது தமிழீழ உணர்வையும், எமது மக்கள் எம் நாட்டில் கைதிகளாக்கப்பட்டு, வாய்பேச முடியாது இருக்கும் நிலையில் இன்று புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவர்களின் குரலாக தமது உறவுகளின் உரிமைக்காக இப் போராட்டத்தை தம் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

அந்த பரிமான மாற்றம் தான் இன்று பிரான்சில் தமிழ்தாயகத்தை வலியுறுத்தும் வாக்கெடுப்பும், அதற்காக மக்களின் பெரும்திரளான வாக்களிப்பும் அங்கீகாரமும் நடந்தேறியிருக்கின்றது. புலம் பெயர்ந்த மக்களின் ஆழ்மனதிலுள்ள தாயகப்பற்றும், அதன் விடுதலை உணர்வையும் சனநாயக ரீதியில் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த கருத்துக்கணிப்பு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பிரான்சில் தமிழ்மக்களை பிரதிநிதிப்படுத்து தமிழர் அமைப்புக்கள் ஓன்று சேர்ந்து நடாத்திய கருத்துக்கணிப்பு வெற்றிகரமாக நடந்தேறியதும், அதன் பின்னர் நோர்வே நாட்டிலும் தமிழீழ மக்கள் அதிகமாக பங்கு கொண்டு தமிழீழ தனியரசே தமிழர்களின் தீர்வு என்பதை வாக்களித்து ஆணித்தரமாக தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்மக்கள் அதிகமாக வாழும் பிரான்சில் இக்கருத்துக்கணிப்பு தேர்தல் நடைபெறுவதற்கான நாள் தெரிவு செய்யப்பட்டது. சில உணர்வாளர்கள் இக்காலப்பகுதி மிகக்குறைவாக உள்ளன என்பதை தெரிவித்திருந்தபோதும் இந்த செயற்திட்டத்தை நிறைவேற்ற உழைக்க முன்வந்த தமிழீழ மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும், குறிப்பாக இளையவர்களும் இதனையொரு சவாலாக செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டனர்.

அதற்கு அவர்கள் வைத்த ஒரேயொரு நம்பிக்கை தமது தேசத்தின் விடுதலைக்காக எந்த நேரத்தில் அழைத்தாலும் அதில் எமது மக்கள் தமது பரிபூரணமான பங்களிப்பை நல்குவார்கள் என்பதேயாகும் இந்த நம்பிக்iயுடன் தமது உயர்கல்வியையும், வேலைகளைகளையும் தற்காலிகமாக நிறுத்தி இரவுபகலாக உழைத்துடன். ஒவ்வொரு கிராமங்கள் தோறும் தமிழ்சங்கங்களின் ஊடாக மக்களுடனான சந்திப்புக்கள், விளக்கங்களும் கொடுத்திருந்தனர்.

இதற்கு பிரான்சு நாட்டின் தமிழர்களின் பத்திரிகைகள், ஈழமுரசு, ஈழநாடும் மற்றும் சங்கதி, பதிவு போன்ற இணையத்தளங்களும், தமிழ்க்கதிர் நேரடியாக மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தன.

.பி.சித் தமிழ் வானொலி, புலிகளின் குரல், மற்றும் வளரி போன்றவையும், ரிஆர்ரி வானொலியும் தொடர்ச்சியாக தமது ஊடக பங்களிப்பினை வழங்கியிருந்தன.

இக் கருத்துக்கணிப்பு தேர்தலின் மிகப்பெரும் வெற்றிக்காக உழைத்த பிரெஞ்சு மக்கள், மற்றும் ஏனைய வெளிநாட்டு மக்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு,எம் தாயக தமிழ்மக்களின் கரங்களை நன்றி உணர்வோடு இறுக பற்றிக்கொள்வதுடன், தாயகத்திற்கு அடுத்த படியாக அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் கனடா,லண்டன் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் இக்கருத்துக்கணிப்பு தேர்தலில் அனைத்து தமிழ்மக்களும் கலந்து கொண்டு தமது தாயகப்பற்றினை தெரியப்படுத்த வேண்டும் என்றும், பெருவெற்றி பெறவும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வாழ்த்துகின்றது.

0 Responses to பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் சிறப்புச் செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com