Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

படையினரால் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலரை எதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளார்கள் என்று சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பில் உள்ள - பெயர் குறிப்பிட விரும்பாத - மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி, சிறிலங்கா படையினரால் முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முகாம் ஒன்றின் மீது, தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்கள் சிலரை பயன்படுத்தி பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு அந்த முகாமில் உள்ள போராளிகளை படுகோலை செய்ய உத்தரவிடுவது என்றும் -

அவ்வாறு தாக்குதல் நடத்தப்படும்போது அந்த முகாமுக்கு காவலுக்கு நிற்கும் சிறிலங்கா இராணுவத்தினர் முகாமில் உள்ளவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் முற்றாக அழித்தொழிப்பது என்றும் -

தமது முன்னாள் போராளிகளை மீட்கும் நோக்குடன் விடுதலைப்புலிகளின் அணி ஒன்று மேற்கொண்ட தாக்குதலை தாம் முறியடித்ததில் அனைத்து போராளிகளையும் கொலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்தியை வெளியிடுவதற்கும் - இராணுவ புலனாய்வு பிரிவினர் மிகப்பெரிய ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக குறிப்பிட்ட இராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள இந்த படுகொலை மிகப்பெரிய மனிதப்பேரவலமாகவும் போர்க்குற்றமாகவும் இருக்கும் என்று கொழும்பில் உள்ள மனித உரிமை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் இரகசிய வதைமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளை பார்வையிடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினருக்கோ ஐக்கிய நாடுகள் அமைப்பினருக்கோ சிறிலங்கா அரச அனுமதி மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளது சரியான எண்ணிக்கையோ பெயர் விவரமோ எதுவும் சிறிலங்கா அரசினால் வெளியிடப்படவில்லை.

நன்றி: ஈழநேஷன் இணையம்

0 Responses to தேர்தலுக்கு முன் முன்னாள் போராளிகள் பலரை கொலை செய்ய புலனாய்வு பிரிவினர் திட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com