ஆஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வருடா வருடம் நடத்தும் நத்தார் தின வேண்டுதல் எனப்படும் தாயக உறவுகளுக்கான அவசரகால உதவி நிவாரண நிதி சேகரிப்பு நிகழ்வு நாளை நத்தார் தினத்தன்று நடைபெறவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ள இந்த நன்கொடை சேகரிப்பு நிகழ்வு தொடர்பாக ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வு கழகம் விடுத்துள்ள ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"ஈழத்தில், யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் சொல்லொணாத்துயரங்களில் துவண்டுபோயுள்ள எமது மக்கள், இவ்வாண்டு நடுப்பகுதியில் இடம்பெற்ற பயங்கர யுத்தம் விளைவித்த அனர்த்தங்களினால், இடம்பெயர்ந்து வவுனியா வதைமுகாம்களுக்குள்; அகப்பட்டு மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
"எமது உறவுகளுடைய அவலத்தைப் போக்கவும், எமது தமிழ் உறவுகளின் வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 17 ஆவது ஆண்டாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “அவசரகால உதவி நிதித்திட்டத்திற்கு” ஆதரவாக "3CR தமிழ்க்குரல்" வானொலியிலும், 24 மணிநேர "இன்பத்தமிழ்ஒலி" வானொலியிலும் நடைபெறும் "கிறிஸ்மஸ் ரேடியோ தொனில்", மெல்பேர்னின் சகோதர தமிழ் சமூகவானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளைய மாணவர்களும் இந்த உன்னதப் பணியில் இணைந்து கொள்கின்றனர்.
"இந்த நிதிசேகரிப்பிற்கு ஆஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களை சேர்ந்த மற்றைய தமிழ் சமூக வானொலிகளும் இணைந்து ஆதரவு வழங்குகின்றன என்பதையும் அறியத்தருகின்றோம்.
"டிசெம்பர் 25 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள வானொலி ஒலிபரப்பு நேரத்தில், உங்கள் நன்கொடைகளை வழங்கத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 1300 721 399"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஈழநேஷன் இணையம்

0 Responses to நத்தார் தினத்தன்று ஆஸ்திரேலியாவில் அவசரகால நிவாரண நிதி சேகரிப்பு