Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா தடுப்புமுகாமிலுள்ள மக்கள் தொடர்பில் தனது தனிப்பட்ட கருத்தை சக சிங்கள மருத்துவர் ஒருவருக்கு - அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க - மின்னஞ்சல் மூலம் தெரிவித்த தமிழ் மருத்துவர் ஒருவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டு சிறிலங்கா சுகாதார திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது கருத்து சிறிலங்கா அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலுள்ளது என்று இந்த விசாரணைக்குரிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

தமிழ் வைத்தியர் முரளி வள்ளிபுரநாதனுக்கு அவரது சக மருத்துவரான கிருஷாந்த அபயசேனவினால் மின்னஞ்சல் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. "அவசரம்" என்று தலைப்பிடப்பட்டு அனுப்பப்ட்ட இந்த மின்னஞ்சலில் - சிறிலங்கா விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிடவேண்டுமா என்று சி.என்.என். செய்தி இணையத்தளத்திலும் தொலைக்காட்சி இணையத்தளத்திலும் மேற்கொள்ளப்படும் கருத்து கணிப்பில் "இல்லை" என்ற பொத்தானை அழுத்தி வாக்களிக்குமாறு குறிப்பிட்ட சிங்கள வைத்தியர் கோரியுள்ளார்.

இதற்கு மின்னஞ்சலில் தனது தனிப்பட்ட கருத்தாக பதிலனுப்பிய வைத்தியர் முரளி வள்ளிபுரநாதன் - " எங்களை என்ன செய்ய சொல்கிறீர்கள்? பலவந்தமாக முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கும் மருத்துவ சீர்கேட்டை பார்த்துக்கொண்டு மெளனமாக இருக்க கோருகிறீர்களா? மருத்துவ தொழிலில் உள்ளவர்கள் என்ற ரீதியில் இன்றை நிலையில் இந்த விடயத்தை - இனவாத நோக்கமின்றி - மேலும் வெளிப்படையாக நோக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். தடுப்புமுகாமில் உண்மையில் என்ன நடைபெறுகின்றது என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி தெரியாவிடில், சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலியை பாருங்கள்.

எது எப்படியோ, சி.என்.என். இணையத்தளத்தில் நாங்கள் வாக்களித்துவிட்டால் சர்வதேச சமூகம் சிறிலங்கா விவகாரத்தில் தலையிடப்போவதில்லை" - என்று கூறி, தனது மின்னஞ்சலுக்கான பதிலுக்கு தான் காத்திருப்பதாக தெரிவித்து-

சனல்-4 வெளியிட்ட படுகொலை காட்சி அடங்கிய காணொலி இணைப்பையும் அந்த மின்னஞ்சலில் இணைத்து, வெள்ளைவான் பயங்கரம் குறித்தும் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து, கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா சுகாதரத்திணைக்களத்தின் விசாரணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எல்.. நவரத்னவிடமிருந்து வைத்தியர் முரளி வள்ளிபுரநாதனுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், வைத்தியர் கிருஷாந்த அபயசேனவிற்கு கடந்த 12 ஆம் திகதி மே மாதம் 2009 அன்று அனுப்பிய மின்னஞ்சல் தொடர்பாக தமது திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவர் 21 ஆம் திகதி ஜூலை 2009 அன்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதால், அந்த விசாரைணக்கு வருமாறு தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த விசாரணைக்கு சென்று வந்த வைத்தியர் முரளி வள்ளிபுரநாதனுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் சிறிலங்கா சுகாதார திணைக்கள செயலரிடமிருந்து கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், வைத்தியர் கிருஷாந்த அபயசேனவிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் சிறிலங்கா அரசின் நன்மதிப்புக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விசாரணைக்குழு கருதுவுதால், இது தொடர்பான முழுமையான விசாரணை நிறைவடையும்வரை வைத்தியர் முரளி வள்ளிபுரநாதன் பணயியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் முரளி வள்ளிபுரநாதன் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் -

மருத்துவர் அபயசேனவிற்கு மின்னஞ்சலில் அனுப்பியது எனது தனிப்பட்ட கருத்து. மருத்துவராக எனது தொழில்சார்ந்த கருத்தாக அந்த மின்னஞ்சலை நான் அனுப்பவில்லை. எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் எனது தனிப்பட்ட கருத்தை கூறுவது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை பேச்சுரிமை. அதனை அரசியலாகவும் இனவாதமாகவும் எனது முத்திரைகுத்தியுள்ளமை, சிறிலங்கா அரசு தனது மக்கள் மத்தியில் எவ்வாறான நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

(வைத்தியர் முரளி வள்ளிபுரநாதனுக்கு சிறிலங்கா சுகாதார அமைச்சு அனுப்பிவைத்த கடிதங்களின் பிரதிகள் கீழே உள்ளன.)



நன்றி: ஈழநேஷன்

0 Responses to தடுப்புமுகாம் மக்கள் தொடர்பாக தனிப்பட்ட கருத்தை கூறிய தமிழ் மருத்துவருக்கு நேர்ந்த கதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com