தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மூன்று தடவைகள் சிறிலங்கா அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் ஏன் அழைத்துச்செல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டால் நான் நான்காம் மாடிக்கு செல்லநேரிடும். ஆகவே, நான் அதனை இங்கு தவிர்த்துக்கொள்கிறேன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கல்முனையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பின்னர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -
கைதுசெய்யப்பட்ட கே.பி. கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் அனுர பண்டாரநாயக்க மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் தங்கிய அமைச்சர்கள் வாசஸ்தலத்திலேயே தங்கவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். முக்கிய சந்திப்புக்களுக்காக கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்கே அழைத்துவரப்படுகிறார். மூன்று தடவைகள் வெளிநாட்டு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். விடுதலைப்புலிகளின் கப்பல்களை அவரிடமிருந்து வாங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவை பற்றி மேலதிகள தகவல்களை நான் இங்கு வெளியிட்டால் நான் நாலாம் மாடிக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அவற்றை இங்கு தவிர்த்துவிடுகிறேன்.
சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை கோத்தபாயவின் உத்தரவின் பேரில் படையினர் சுட்டுக்கொன்றார்கள் என்று பொன்சேகா கூறிய விடயத்துக்கு எதிராக - இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றத்தின்பேரில் - நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா அரசு முதலில் தெரிவித்தபோதும் அந்த முயற்சியை அவர்கள் தற்போது கைவிட்டுவிட்டார்களே ஏன?
சண்டேலீடர் பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய செவ்வியை அவர் மறுத்துவிட்டார் என்று சர்வதேச சமூகத்துக்கு சிறிலங்கா அரசு தரப்பு தொடர்ந்து கூறி வருகின்றதே தவிர பொன்சேகா கூறிய விடயங்கள் தொடர்பாக தனது தரப்பு விளக்ககத்தை சிறிலங்கா அரசு இன்னமும் வெளியிடவில்லையே ஏன?
பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரே இரவில் முடிவு எடுத்துவிடவில்லை. எத்தனையோ விடயங்களை பரிசீலித்து அயல்நாடுகள் மற்றும் ஏனைய சக்திகளின் சிறிலங்கா தொடர்பான ஆர்வங்கள் குறித்து தீவிரமாக பரிசீலித்து சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு சரியான முடிவு எது என்று ஆராய்ந்துதான் எமது முடிவை எடுத்தோம்.
- என்று அவர் கூறினார்.
நன்றி: ஈழநேஷன்

0 Responses to கே.பி. மூன்று தடவைகள் சிறிலங்கா அரசினால் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்: ஹக்கீம் தகவல்