Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த கருணா பிரிந்து செல்ல காரணமானவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலி ஸாகீர் மௌலானா எனக் கூறப்பட்டது. இவ்வாறான செயலில் அவர் ஈடுபட்டதால் தமது உயிருக்கு ஆபத்து எனக் கருதிய அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்கு வந்து தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துவரும் அவர் இன்று முதன்முதலாக ஊடகவியலாளர் கூட்டத்தில் பங்கெடுத்தார். அப்போது புலிகளுடன் அரசு பேச்சுக்கள் நடத்திவந்த வேளையில் கருணாவும் பங்கெடுத்திருந்தபோது, முதலில் கூட்டாட்சிக்கு இணங்கி மக்கள் பிரச்சனைக்கு முடிவு காணுவதற்கு இணங்குமாறு கருத்துத் தெரிவித்ததாலேயே பிரபாகரனுடன் அவருக்கு முறுகல் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார் அலி ஸாகீர்.

ஒஸ்லோவில் 2002 டிசம்பரில் நடந்த பேச்சுக்களுக்கு தலைமை தாங்கிய அன்ரன் பாலசிங்கத்திடன் கருணா இக்கருத்தைத் தெரிவித்து கூட்டாட்சி அமைப்புக்கு ஒத்துக்கொள்ளும்படி கேட்டிருந்தாராம். எனவே ஐக்கிய இலங்கைக்குள் கூட்டாட்சி முறையின் சாத்தியன் குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக நோர்வே கூறியது. இதையறிந்த பிரபாகரன் கோபப்பட்டுள்ளார். ஆனால் கூட்டாட்சி முறைகுறித்து தமது பேச்சுவார்த்தைக்குழுவில் பேசியவர் கருணா தான் என அப்போதைய பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த முக்கிய புள்ளி ஒருவர், பிரபாகரனிடம் போட்டுக் கொடுத்ததால் அவர் கருணா மீது கோபப்பட்டதாக அலி ஸாகீர் மேலும் கூறியுள்ளார்.

அதாவது கூட்டாட்சி முறையை அன்றே தேசிய தலைவர் அவர்கள் எதிர்த்திருக்கிறார் என்பது புலனாகிறது. சுயநிர்ணய உரிமை, தமிழீழமே இறுதித்தீர்வு என்பதில் இருந்து அவர் சற்றும் தளரவில்லை இல்லை, மாறாத மன உறுதியோடு இருந்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரிந்ததற்கு காரணம் தேடுகிறார்.

நன்றி: அதிர்வு

0 Responses to தேசிய தலைவரிடம் கருணா(ய்)வைப் பற்றி அவதூறுகள் சொல்லப்பட்டதாம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com