Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தென்னாசியா மற்றும் மத்திய கிழக்கு விவாகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலாளர் றொபேட் பிளேக் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளர்.

நேற்று ஐனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் மகிந்த ராஜபக்சவுடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, ஐனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ச, ஐனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சிறீலங்கா வெளிவிவகாரச் செயலர் ரொமேஸ் ஜெயசிங்க ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

இதேநேரம் நேற்றுக் காலை வவுனியா மெனிக்பாம் முகாமுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பிளேக், முகாம் நிலைகள் மிகவும் திருப்திகரமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் முன்னேற்றமான நிலையை அடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவிலயாளர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் அனுமதிக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறீலங்காவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு சுமூகமாக உள்ளது என இன்று நடபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரோபேட் பிளேக் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ரொபேட் ஓ பிளேக் மகிந்த ராஜபக்ச சந்திப்பு: சிறீலங்கா அமெரிக்கா உறவு சுமூகமாக உள்ளது!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com