இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ரொபேர்ட் பிளேக் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பிளேக் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரன் அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றும் அவ்வாறான ஓருவரை கைது செய்ய வேண்டிய அவசியம் தமது அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமது அரசாங்கம் யுத்த குற்றங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்று தமது அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to உருத்திகுமாரனை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை: அமெரிக்கா