அரச தலைவர் தேர்தல் விவகாரம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல துண்டுகளாக பிளந்திருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர்களான சிறீகாந்தா, மாவை. சேனாதிராசா, சிவாஜிலிங்கம் ஆகியோர் கூட்டமைப்பில் தலைமைக்கு எதிராக பிரச்சினைக்குரிய புள்ளிகளாக மாற தொடங்கியுள்ளனர் என்று தெரியவருகிறது.
கூட்டமைப்பு எம்.பி.க்களான சிறீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன் மற்றுமொரு கூட்டமைப்பு எம்.பி. ஆகியோர் கடந்த திங்கட்கிழமை மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவை இரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் மாவை. சேனாதிராஜா - அவர் முன்னர் அங்கம் வகித்த - தமிழரசுக்கட்சியின் சார்பில் அரச தலைவர் மகிந்தவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மீள்குடியேற்றத்தை தமிழரசுக்கட்சி வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க -
கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினராக சிவாஜிலிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் -
அரச தலைவர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும். ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் நானே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
இலங்கையிதமிழர்களை கொன்றொழித்த மகிந்தவும், முன்னாள் தளபதி பொன் சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை மகிந்தவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படுகொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும்.
மகிந்தவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும்.
இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்படமாட்டோம். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
- என்று கூறியுள்ளார்.
நன்றி: ஈழநேஷன்

0 Responses to தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பம்: எம்.பிக்கள் தனித்தனி பாதையில் முடிவு எடுக்க முஸ்தீபு