தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மீறி - அரசதலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். நேற்றுக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தாவுடன் சென்று அவர் கட்டுப்பணம் செலுத்தினார்.
தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான நடவடிக்கை எதனையும் முன்னெடுப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமீபத்தில் முடிவு செய்திருந்தது. அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும் தமிழர் பிரச்சினை தொடர்பாக வெளியிடும் கருத்துகள், உறுதிமொழிகள் ஆகியவற்றை உள்வாங்கி அவர்களில் எவராவது ஒருவரை ஆதரிக்கலாம் அல்லது அரசதலைவர் தேர்தலைப் பகிஷ்கரிக்கலாம் அல்லது இரு பிரதான வேட்பாளர்களையும் தவிர்த்து மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கலாம் என்பன போன்ற யோசனைகள் கூட்டமைப்பு எம்.பிக்களினால் முன்வைக்கப்பட்டிருந்தன.
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தினமான 17 ஆம் திகதிக்கு முன் இது தொடர்பான முடிவு எடுப்பதற்கு கால அவகாசம் போதாமையால், அதற்குப் பின்னர் கூட்டமைப்பு அதன் தீர்மானத்தை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கூட்டமைப்பின் யோசனைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கி இருக்கிறார் சிவாஜிலிங்கம்.
கடந்த பல மாதங்களாக வெளிநாடுகளில் தங்கியிருந்த சிவாஜிலிங்கம் சமீபத்தில் தான் நாடு திரும்பியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை அரச தலைவர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் தாம் சுயேச்சையாகப் போட்டியிடுவாரென அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுக்காத நிலையில் சுயேச்சை வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கி இருக்கின்றமை கூட்டமைப்பு வட்டாரங்களில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to சிறிகாந்தாவுடன் சென்று கட்டுப்பணம் செலுத்தினார் அரச தலைவர் வேட்பாளர் சிவாஜிலிங்கம்!