சர்வதேசத்தின் பிரசன்னத்துடன் சரணடைவதாக நம்பி சிறிலங்கா அரச படையினரிடம் வெள்ளைக்கொடியுடன் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் துப்பாக்கியால் சுட்டும் கோடரியால் வெட்டியும் கோரமாக கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய பல காணொலிகள் அரச தலைவர் தேர்தலுக்கு முன் இராணுவ தரப்பினரால் வெளியிடப்படவுள்ளன என்று கொழும்பிலிருந்து நம்பகரமான செய்திமூலம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை பேசுவதற்கு தயக்கம் காட்டி பின்னர் பெயர் குறிப்பிட விரும்பாமல் தகவல் தெரிவித்த அந்த செய்தி மூலம் மேலும் கூறியதாவது:-
தமிழர்களின் உணர்வினை உலுப்பும் விஷயங்களைத் தேர்தல் காலத்தின் கடைசி நேரத்தில் முன்வைத்து அவர்களை தட்டி எழுப்புவதன் மூலம் அவர்களைத் தம் வலையில் வீழ்த்தும் உத்தியில் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த, பொன்சேகா இரு தரப்புகளும் இப்போதே திட்டங்களை வகுக்கத் தொடங்கி விட்டன.
யுத்தத்தின் இறுதி நாட்களில் மே 16, 17, 18 -ம் தேதிகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை ஏமாற்றி, மசிய வைப்பதற்காக சில முக்கிய நடவடிக்கைகளில் சர்வதேச அமைப்புகளின் பங்கிருப்பதாகக் காட்டும் வகையில் கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்ட நாடகங்கள், அச்சதி வலையில் புலிகளின் தலைவர்களுக்கு ஏற்பட்ட விபரீதங்கள் போன்றவை தொடர்பாகப் பல்வேறு ஒளிப்பதிவுகள் படை உயர் அதிகாரிகள் வசம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தென்னிலங்கைச் சிங்கள வாக்குகள் தமக்குக் கிட்டுவதைப் பாதிக்காமல், அதேசமயம் தமிழர்களின் வாக்குகளைத் தங்களுக்குச் சார்பாகக் கடைசி வேளையில் திருப்பக்கூடியதாக இந்த உணர்வுபூர்வ சமாச்சாரங்கள், வாக்களிப்பு நெருங்கும் சமயத்தில் கசியவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்த தரப்பும், பொன்சேகா தரப்பும் இந்தப் பதிவுகளையும், விஷயங்களையும் ஒருவருக்கு எதிராக மற்றவர் பிரயோகிப்பதற்காக அவற்றை எப்படிப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதே பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகும்.
- என்று அந்த செய்திமூலம் தெரிவித்தது.

0 Responses to புலிகளின் தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடவுள்ள இராணுவதரப்பு