அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்.பி.,க்களுக்கு ராஜபட்சே தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபட்சே சார்பில் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த இக்கடிதங்களை எழுதியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அதிபர் ராஜபட்சே இரு நாட்களுக்கு முன்னர் தனியே சந்தித்துப் பேசியதாகவும், இந்நிலையில் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து எம்.பி.,க்களுக்கும் கடிதம் எழுதப்பட்டிருப்பது அதன் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருதுவதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

0 Responses to தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.,க்களுக்கு ராஜபக்சே அழைப்பு