பெருந்தொகையான ஆயுதங்களுடன் தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானம் தொடர்பாக தடுப்புக்காவலில் உள்ள கே.பியிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:-
குறிப்பிட்ட விமானம் சிறிலங்கா படைகளுக்கான ஆயுதங்களை கொண்டுவரவில்லை என்பது சிறிலங்கா அரசினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, சிறிலங்கா அரசுக்கும் இந்த விமானத்துக்கும் தொடர்பில்லை. ஆனால், விடுதலைப்புலிகளுக்கும் இந்த விமானத்துக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து தடுப்புக்காவலில் உள்ள கே.பியிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வன்னியில் கிழக்கு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த விமான ஓடுபாதைகள் அங்கு விமானங்கள் வந்து சென்றதற்கான ஆதாரங்களாக உள்ளன. ஆகவே, இப்படியான வெளிநாட்டு விமானங்கள் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகத்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
ஆனால், இன்றைய நிலையில் விடுதலைப்புலிகள் அவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சாத்தியங்கள் இல்லவே இல்லை. அவ்வாறு விமானத்தில் வந்து சிறிலங்காவில் திடீர் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தால்கூட தற்போதைய நிலையில் விடுதலைப்புலிகள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள்.
ஆனால், முன்னர் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தும் நடவடிக்கைகளை ஈடுபட்டதா என்பது குறித்த விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் விடுதலைப்புலிகளின் அனைத்துலக ஆயுத வலையமைப்பு குறித்த மேலதிக தகவல்களை பெறமுடியும். இது குறித்த நடவடிக்கைகளை தாய்லாந்து அரசுடன் இணைந்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும்.
சிறிலங்கா இன்றையை நிலையில் இவ்வளவு தொகை ஆயுதங்களை - பக்கத்தில் சீனா இருக்கும்போது - வட கொரியாவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான தேவை அறவே இல்லை - என்று தெரிவித்துள்ளன.

0 Responses to தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானம்: கே.பியிடம் விசாரணை நடத்தப்படும்!