போரின்போது அரச படையினர் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்கு தான் பொறுப்பேற்றபதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவுப்படி அரச படையினர் சுட்டுக்கொன்றனர் என்று ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்ட கருத்தினை அடுத்து ஏற்பட்டுள்ள பரபரப்பை அடுத்து இன்று திங்கட்கிழமை சரத் பொன்சேகா அவசர அவசரமாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கூட்டினார்.
அதில் தனது கருத்தை குறிப்பிட்ட ஊடகம் திரிபுபடுத்திவிட்டது என்றும் கோத்தபாயவின் உத்தரவுப்படி சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தான் கூறவில்லை என்று கூறினார். குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் தான் சிறிலங்காவில் இருக்கவில்லை என்றும் இராணுவ தளவாட கொள்வனவுக்கான மதிப்பீட்டு பணிக்காக சீனாவுக்கு சென்றிருந்ததாகவும் அக்காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலரின் கட்டளையின்படி - தனக்கு தெரியாமல் - சில நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவே தான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போரில் படையினர் மேற்கொண்ட எந்த நடவடிக்கையாக இருந்தாலும் படைகளின் தளபதி என்ற வகையில் அவற்றுக்கு தான் பொறுப்பேற்பதாக கூறிய பொன்சேகா, களத்திலே நின்று போராடிய தளபதிகள் சர்வதேச போர் நியமங்களின் பிரகாரமே தமது நடவடிக்கையை மேற்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் விடுத்துள்ள நிலையில், படையினரின் சகல நடவடிக்கைகளுக்கும் தான் பொறுப்பேற்பதாக - அமெரிக்க பிரஜையாகிய - பொன்சேகா துணிச்சலாக தெரிவித்திருப்பது, சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் நிச்சயம் நடைபெறாது என்ற பொன்சேகாவின் நம்பிக்கையையே காண்பிக்கின்றது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

0 Responses to போர்க்களத்தில் நடந்தது அனைத்திற்கும் நானே பொறுப்பு சரத் பல்ட்டி