கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் திடீரென தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தன் கூறுகையில், தேர்தல் புறக்கணிப்பு முடிவு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நான் நீண்ட நேரம் வாதிட்டேன். அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கா விட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம். மக்களின் வாழ்விலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விஷயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விஷயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாங்கள் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றார்.
பிரிந்து கிடந்த பல்வேறு தமிழ்க் கட்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டதே விடுதலைப் புலிகள் தான். அந்த நடவடிக்கையால்தான் இலங்கை அரசின் பல்வேறு அராஜக நடவடிக்கைகளின் வேகத்திற்கு முட்டுக்ட்டை போடப்பட்டது.
விடுதலைப் புலிகள் கை காட்டியதால்தான் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை எம்.பிக்களையும் தமிழ் மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இந்த நிலையில் விடுதலைப் புலிகள் எடுத்த முடிவுதான் தமிழர்களின் அழிவுக்கு முக்கியக் காரணம் என்று சம்பந்தன் பாய்ந்திருப்பது ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to புலிகள் மீது சம்பந்தன் திடீர் பாய்ச்சல்