Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் ஈழப் போரில் மனித உரிமை மீறலால் தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் பலர் இன்று வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமை மீறலினால் போரில் பலியான பல்லாயிரக்கானக்கான பொது மக்களுக்கு மனிதம் அமைப்பின் சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சிந்தாதிரிப்பேட்டை கிளை சார்பில் 27.11.2009 அன்று மாலை சிந்தாதிரிப்பேட்டை பள்ளி ஒன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாய், போரில் மனித உரிமையினால் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு, மெழுகுதீரி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிந்தாதிரிப்பேட்டை கிளையின் மனிதம் பொறுப்பாளர் சிவா அவர்கள் தலைமை வகித்தார். சிறப்புரையை மனிதம் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்ரமணியம் நிகழ்த்தினர்.

அவருடைய உரையின் போது, இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் மீது பல படுகொலைகளை நிகழ்த்தி உள்ளதை விளக்கிக் கூறினார். இலங்கையின் தமிழ் மக்கள் மீதான அடைக்குமுறைகளை வருடம் வாரியாக கோடிட்டுக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை, உலக பொது மன்னிப்பு சபை மற்றும் உலக மனித உரிமை இயக்கங்கள் எவ்வாறு இவற்றிக்கு கண்டனங்களை தெரிவித்தன என்பதையும், சென்ற மே மாதம் கடைசி கட்ட போரின் போது, ஒரு கிலோ மீட்டருக்கும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை வலையத்திற்கு சிக்க வைத்து, இலங்கை இராணுவம் வீசிய குண்டுகளால் எவ்வாறு மக்கள் பலியாகினர் என்பதை சொல்லிய போது, கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இறுதியாக நன்றி உரை நிகழ்ச்சியுடன் கூட்டம் நிறைவுற்றது.

Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com

0 Responses to மனிதம் அமைப்பின் சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிளை மனித உரிமை மீறலால் இலங்கை போரில் மாண்ட மக்களுக்கு அஞ்சலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com