20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக்கட்டமாக வளர்ந்து வரும் உற்பத்தி தொழில் நுட்ப முன்னேற்றம் என்பன உலகின் இயற்கைச் சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதனைக் காணமுடிகின்றது. இதனால் அழிக்கப்படுகின்ற அல்லது குழப்பமடைகின்ற இயற்கைச் சூழலின் எதிர்வினை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.
இதனால் புவியின் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு வடதுருவப் பனிப்பாறைகள் உருகுவதனால் உலகின் சில நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சமூக ஆர்வலர்கள் 21ஆம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பெரும் பிரயத்தனம் மேற்கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் இலங்கையின் சுற்றுச் சூழல்ப் பாதுகாப்பு என்பது அரசினைப் பொறுத்தவரை மிகக் கசப்பானதொன்றாகவே கணிக்கப்படுகின்றது.
கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் ஏற்பட்ட தீவிரமான யுத்தம் அப்பகுதியின் மக்களை மாத்திரமல்ல இயற்கை வளத்தையும், மிகப்பாரதூரமாகவே சீரழித்துவிட்டிருக்கிறது. வட - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரமாண்டமான இராணுவ நடவடிக்கைகள் வட - கிழக்கின் இயற்கை காடுகளையும், பயன்தரு மரங்களையும் பெருமளவில் அழித்து இப்பிரதேசங்களின் சுற்றுச் சூழலை பெருமளவில் பாதித்திருக்கும் வகையினை நோக்குவோம்.
இலங்கையின் வட - கிழக்கு காடழிப்பு என்று பெரும்படியாகக் குறிப்பிட்டாலும் வடக்கில் நிகழ்ந்த காடழிப்புக்களே உத்தேச மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதாக அல்லது அறியப்பட்டதாக உள்ளது. கிழக்கில் நிகழ்ந்த அழிவுகள் இத்தொடரில் ஆராயப்படவில்லை. ஆகவே வடக்கில் நிகழ்ந்த பெருமெடுப்பிலான காடழிப்பு நடவடிக்கையை நோக்குவோமாயின் 1996 இல் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி மேற்கொள்ளப்பட்ட எடிபல இராணுவ நடவடிக்கை மூலம் ஏ30, ஏ14 ஆகிய இரு வீதிகளின் இரு மருங்கிலும் சராசரி 50 தொடக்கம் 100 மீற்றர் வரையான அகலமாக உள்ள காடுகள் அழிக்கப்பட்டு அவை இராணுவ பாதுகாப்பு வேலிகளுக்குள் விழுங்கப்பட்டு விட்டன.
இதில் மதவாச்சியிலிருந்து மன்னார் செல்லும் ஏ14 வீதியில் செட்டிகுளத்திலிருந்து பறையனாலங்குளம் ஊடாக கட்டையடம்பன் வரை கிட்டத்தட்ட 30 கிலோ மீற்றர் தூரத்திற்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே வவுனியா - மன்னார் ஏ30 வீதியில் பூவரசங்குளத்திலிருந்து பறையனாலங்குளம் வரையாக கிட்டத்தட்ட 25 கிலோ மீற்றர் நீளமான பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் சராசரி கிட்டத்தட்ட 50 தொடக்கம் 100 கிலோ மீற்றர் வரையாக உள்ள காடுகள் அழிக்கப்பட்டன.
அத்தோடு ஏ30 வீதியின் வடபுறத்தே அமைக்கப்பட்ட பாதுகாப்பு மண்அணையும் பெருமளவு இயற்கைக் காடுகளை அழிக்கவைத்ததோடு சிற்றாறுகளின் நீரோட்டத்திசையினை மாற்றியமைத்து பயிற்செய்கைக்குப் பயன்படுத்தப்படுகின்ற குளங்களின் நீர் வரத்தினை குளத்தின் நீரேந்துப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தியதோடு அவற்றின் போக்கினை திசைதிருப்பி விட்டுள்ளது.
மொத்தத்தில் எடிபல இராணுவ நடவடிக்கை வவுனியா - மன்னார் மாவட்டங்களின் இயற்கைக் காடுகளின் ஏறக்குறைய 1300 ஏக்கர் பரப்பளவு அழிக்கப்பட்டு விட்டது. இதற்கான மீள்நடுகை இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. அடுத்து 1997 - 1999 வரையான காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கை மிகப்பெரியளவிலான காடழிவுக்கு காரணமாயிற்று.
ஏ9 வீதிவழியே ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் மாங்குளம் வரையான பகுதிகளில் வீதியின் இரு மருங்கிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதோடு ஓமந்தையிலிருந்து - மாங்குளம் வரையான 40 கிலோ மீற்றர் நீளமான பகுதிகளில் ஆங்காங்கே காணப்படுகின்ற குடியிருப்புக்கள் தவிர்ந்த பகுதிகளில் உள்ள காட்டு மரங்கள் அழிக்கப்பட்டதோடு இப்பிரதேசத்திலிருந்த பயன் தரு தென்னைமரங்கள் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்கான இராணுவத்தால் அழிக்கபட்டுள்ளது.
ஜயசிக்குறூய் நடவடிக்கையின் இறுதிக்கட்ட எல்லையாக விளங்கிய மாங்குளத்திலிருந்து கிழக்காக முல்லைத்தீவு செல்லும் ஏ34 வீதியில் ஒட்டுசுட்டான் வரையான 27 கிலோ மீற்றர் நீளப்பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் உள்ள காடுகள் 50 - தொடக்கம் 100 மீற்றர் வரையான காட்டுமரங்கள் அழிக்கப்பட்டது. அத்தோடு வீதியின் வடபுறத்தே அமைக்கப்பட்ட மண் அணை பாதுகாப்பு அரணுக்காகவும் காடுகள் அழி;க்கப்பட்டன.
மாங்குளப் பிரதேசத்தில் மாங்குளம் - மூன்றுமுறிப்பு - வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, காடுவளர்ப்புத் திட்டத்தினால் வளர்க்கப்பட்ட தேக்கங் காடுகளும், மற்றும் புதூர் பகுதியிலும், புளியங்குளம் பகுதியிலும், பன்றிக்கெய்தகுளம் பகுதியிலும் இருந்த தேக்கம் காடுகளும் முற்று முழுதாக தறித்து எடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு திருட்டுத்தனமாக இராணுவ அதிகாரிகளாலும், அரசியல் வாதிகளாலும் கொண்டு செல்லப்பட்டது. அதே போல மாங்குளத்திற்குக் கிழக்கே ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள தேக்கம் காடுகளும் முற்றுமுழுதாக வெட்டிச் செல்லப்பட்டு விட்டது.
இதன்மூலம் மாங்குளம் பிரதேசத்தில் வளர்க்கப்பட்ட கிட்டத்தட்;ட 1000 ஏக்கர் தேக்கங்காடுகள் அழியுண்டு போயின. ஜயசிக்குறூய் நடவடிக்கையின் கிழக்கு முனை இராணுவ நகர்வின் மூலம் மணலாற்றிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் நெடுங்கேணி - ஒட்டுசுட்டான் வீதியிலும், நெடுங்கேணி - வெடிவைத்தகல்லு வீதியிலும் இருமருங்கிலும் இருந்த காடுகளை அழித்ததோடு நெடுங்கேணியிலிருந்து - குளவிசுட்டான் - கோடாலி பறிச்சான் ஊடாக ஏ34 வீதியில் உள்ள மணவாளன்பட்டமுறிப்பு வரை காடுகளுக்கூடாக 30 கிலோ மீற்றர் நீளமுடைய ஒரு புதிய பாதையை அமைத்து அதன் இருமருங்கிலும் உள்ள காடுகளை அழித்திருக்கின்றனர்.
ஒட்டுசுட்டான் - நெடுங்கேணியூடாக மணலாற்றிலுள்ள டொலர், கென்ற் பண்ணைகள் வரை கிட்டத்தட்ட 40 கிலோமீற்றர்களுக்கு தொடர் மண்அணைப் பாதுகாப்பை அமைப்பதற்காகவும் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஏ9 வீதிக்குக் கிழக்கே 2500 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உத்தேச மதிப்பீடுகள் கூறுகின்றன. ஆனால் இதன் பரப்பு மேலும் அதிகம். அடுத்து ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கையில் ஏ9 வீதியின் மேற்குப்புறத்தே அமைந்திருந்த யாழ் புகையிரதப் பாதையை கிரவல் பாதையாக மாற்றி போக்குவரத்திற்கு பயன்படுத்தியதோடு அதன் மேற்குப்புறம் ஒரு பாதுகாப்பு மண்அணையை நொச்சிமோட்டையிலிருந்து - புளியங்குளம் வரை இரும்புப் பாதைக்குச் சமாந்தரமாகவும் பின்பு சற்று மேற்கு நோக்கி வளைந்து புதூர் - புதுவிளாங்குளம் ஊடாக வன்னிவிளாங்குளம் வரை காடுகளுக்கூடாக கிட்டத்தட்ட 50 கிலோமீற்றர்கள் நீளத்திற்கு மண்அணை உருவாக்கப்பட்டது.
இதன்மூலம் 1300 ஏக்கர் நிலப்பரப்புக் காடுகள் அழியுண்டன. இவ்வாறே பிரமலானங்குளத்திலிருந்து - மடு, - பாலம்பிட்டி, - பெரியமடு, - பள்ளமடு வீதியிலும் இராணுவப் பாதுகாப்பிற்காக இருமருங்கிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பள்ளமடுவிலிருந்து காடுகளுக்கூடாக சிறாட்டிகுளம் - பனங்காமம் - மூன்றுமுறிப்பு - வன்னிவிளாங்குளம் - மாங்குளம் ஆகிய இடங்கள் வரை தொடுத்து உருவாக்கப்பட்ட மண்அணைப் பாதுகாப்பு வேலியும், மண் அணைக்கு வெளியே பாதுகாப்புக்கென 50 தொடக்கம் 100 மீற்றர் வரையான காட்டுமரங்கள் தறித்தழிக்கப்பட்டதனால் ஏற்பட்ட இழப்பு 1000 ஏக்கர்களுக்கு மேல். மொத்தத்தில் ஜயசிக்குறூய் நடவடிக்கையில் மண்அணைப்பாதுகாப்பு வேலைகளுக்காகவும், வீதிப்போக்குவரத்துக்காகவும் அழிக்கப்பட்ட பல ஆயிரம் ஏக்கர்கள் பரப்பளவுக் காடுகள் அழிக்கப்பட்தோடு மணலாற்றிலிருந்து - மாங்குளம் ஊடாக - பள்ளமடு வரை அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரணுக்குத் தென்புறத்தே இருந்த பெறுமதி வாய்ந்த வைரமரங்களான பாலை, முதிரை, யாவரணை, சமண்டலை ஆகிய மரங்கள் வகைதொகையின்றி அரிந்தெடுக்கப்பட்டு தென்னிலங்கைக்கு திருட்டுத்தனமாகக் கடத்தப்பட்டன.
இது தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பொருளாதாரத் திருடல் என்றே சொல்லலாம் மேற்படி மரங்கள் மீண்டும் வளர்வதற்கு 150 வருடங்கள் தேவைப்படும். மேற்குறிப்பிடப்பட்ட பிரதேசத்தில் 1999 விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாதஅலைகள் நடவடிக்கை மூன்றின் மூலம் ஜயசிக்குறூய் பின்வாங்கி தமது பழைய நிலைக்குச் சென்றவுடன் ஏ9 வீதியிலும், வன்னிவிளாங்குளத்திலிருந்து - மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியிலும், நெடுங்கேணி - ஒட்டுசுட்டான் வீதியிலும் இராணுவத்தால் காடுகள் அழிக்கப்ட்ட நிலங்களில் தேக்கு, மகோகனி (மலைவேம்பு), வேம்பு ஆகிய மரங்கள் 2000 - 2004 ஆகிய காலப்பகுதிகளில் மீள்நடுகை செய்யப்பட்டது.
ஆனால் இறுதியாக நடந்த யுத்தத்தின் போது மீள்நடுகை செய்யப்பட்ட மரங்கள் மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டது. அடுத்து யாழ்க்குடாநாட்டின் நுழைவாயிலான ஆனையிறவு தொடக்கம் - பளை வரையான பகுதியிலுள்ள இயற்கைத் தாவரம் சதுப்புநில முட்புதற்காடுகளும் பனை மரங்களுமே. இப் பளைப்பிரதேசத்தில் பெரும்பகுதி தென்னைமரப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பளைக்கு அப்பாலுள்ள முகமாலைப் பகுதியில் கிளாலி தொடக்கம் - முகமாலை - நாகர் கோயில்வரை அமைக்கப்பட்ட இராணுவத் தொடர் வேலியும் மண் அணையும் இராணுவத் தேவைக்காக தறித்தெடுக்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை 2004 இல் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி 12,000 இற்கும் மேல் சென்றுவிட்டது.
அதன்பின் இறுதி யுத்தத்தின் போது. மேலும் பல ஆயிரம் தென்னைமரங்கள் அழிந்து போயின. அத்தோடு இப்பிரதேசத்தின் இயற்கைத் தாவரங்களான கண்டல்க் காட்டுத் தாவரங்களும், பனை, மரங்களும் பெருமளவில் இராணுவ பீரங்கி, விமானத் தாக்குதல்களினாலும், பாதுகாப்புத் தேவைகளுக்காகவும் தறித்தழிக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் போது இப்பிரதேசத்தின் அழிவுகள் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இன்னும் உத்தேச மதிப்பீடு செய்யப்படவில்லை.
இறுதியாக நடந்த யுத்தத்தின் போது வன்னியின் மேற்குப்புறத்தே நாச்சிக்குடா - அக்கராயன் - முறிகண்டி ஊடான தொடர் பாதுகாப்பு முன்னரண் பகுதி தொடர்ச்சியாக நீண்டநாட்கள் சண்டைகள் இடம்பெற்றதனால் இப்பகுதியில் உருவாக்கப்பட்ட மண் அணைக்காகவும், அகோரக் குண்டுத் தாக்குதல்களினாலும் இராணுவத்திற்கு பாதுகாப்பான போக்குவரத்திற்காக துணுக்காயிலிருந்து அக்கராயன் வரையான வீதிகளின் இருமருங்கிலும் உள்ள பெருமளவிலான காட்டுமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இப்பகுதியின் அழிவுகள் பற்றிய மதிப்பீடு செய்யமுடியாதுள்ளது.
மற்றும் கிளிநொச்சி நகரத்தைக் கைப்பற்றுவதற்காக நடந்த உக்கிர மோதல்களின் போது இராணுவம் பயன்படுத்திய பிரமாண்டமான வெடிபொருள் பயன்பாடு (ஆட்லரி, விமானத்தாக்குதல்) அப்பிரதேசத்தின் பயன்தரு பல்லாண்டுப் பயிர்களான மா, பலா, தென்னை மரங்களை பெருமளவில் அழிவடையச் செய்துவிட்டது. அவ்வாறே பரந்தனிலிருந்து ஏ35 வீதிவழியே புதுக்குடியிருப்புவரை படையினர் பயன்படுத்திய மிகப் பிரமாண்டமான விமானக் குண்டுகள் இப்பிரதேசத்தின் இயற்கைக் காடுகளை மாத்திரமல்ல மக்கள் குடியிருப்பி;ன் பயன்தரு பல்லாண்டுப் பயிர்களையும் அழிவடையச் செய்துவிட்டது.
மேலும் மணலாற்றிலிருந்து - முல்லைத்தீவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவம் பயன்படுத்திய பிரமாண்டமான வெடிபொருள் பயன்பாடு அளம்பில் - செம்மலை - முள்ளியவளை பிரதேசங்களை உள்ளடக்கிய தென்னைப்பயிர்ச்செய்கை நிலங்களை அழிவடையச் செய்துவிட்டது. இப்பிரதேசத்தி;ன் அழிவை உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக உத்தேச மதிப்பீடு செய்ய முடியவில்லை. அத்தோடு இப்பிரதேசத்திலுள்ள களிக்காட்டுப் பகுதியிலிருந்த தேக்கு மரக்காடுகளும் திருட்டுத்தனமாக தற்போது அரசியல்ச் செல்வாக்கு மிக்கோரினால் தறித்தெடுக்கப்படுவதாக சுயாதீனத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
இது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியிருந்து இடம் பெயர்ந்த மக்களை அடைப்பதற்காக அகதி முகாம்களை உருவாக்கவென மதவாச்சி - மன்னார் வீதியில் செட்டிகுளம் பிரதேசத்தில் ஏ14 வீதிக்கும் அதன் மேற்குப் புறத்தில் உள்ள அருவி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியிலும், வீதியின் கிழக்குப் புறத்திலும் கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவான இயற்கைக் காடுகள் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்காமல் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அழித்தொழிக்கப்பட்ட காடுகளில் அமைக்கப்பட்ட முகாம்களான மினிக்பாம், அருணாச்சலம், கதிர்காமர், ஆனந்தக்குமாரசுவாமி முகாம், ஆகியவற்றோடு இணைந்த உப முகாம்களும் அமைந்துள்ள பிரதேசம் இன்று பாலைவனமாகத் தோற்றமளிக்கின்றது.
ஆகவே வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது உருவாக்கப்பட்ட மண் அணை, வீதிப்பாதுகாப்பு, புதிய பாதைகளை அமைத்தல், இராணுவ ஆட்லறிப் பீரங்கித் தளங்களை உருவாக்குதல், புதிய இராணுவ முகாம்களை அமைத்தல் போன்றவற்றிற்காக பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இயற்கைக் காடுகள் அழி;க்கப்பட்டதோடு காட்டுச் சண்டைகளின் போது மேற்கொள்ளப்பட்ட விமானம் மற்றும் ஆட்லறித் தாக்குதல்களினால் பெருங்காட்டுப் பகுதியின் உட்பகுதிக் காட்டுமரங்கள் அழிந்து காட்டின் செறிவு ஐதாக்கப்பட்டுள்ளது.
வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் மழையைப் பெறுகின்ற வன்னிப் பெருநிலப்பரப்பு காடுகளின் உயர்மரங்களும், இப்பிரதேசத்தின் உயரமான பனை, தென்னை மரங்களும் அழிக்கப்பட்டதனால் எதிர் காலத்தில் பருவமழை பொய்த்து அல்லது மழைவீழ்ச்சி குன்றுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள. இப்படைநடவடிக்கையின் போது வன்னியின் காட்டுவளம் மாத்திரம் அல்ல பெருமளவிலான வன விலங்குகளும் மற்றும் விவசாயிகளின் பெருந்தொகையான கால்நடைகளும் அழிவடைந்து இப்பிரதேசத்தின் இயற்கைச் சமநிலை முற்றுமுழுதாக மாற்றமடைந்து சென்றுள்ளது.
இதன்மூலம் எதிர் காலத்தில் இப்பிரதேசத்தின் இயற்கை அனர்த்தங்கள் மிகப் பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இதனை உலகின் சமூகநல ஆர்வலர்கள் இன்றுவரை கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை.
நன்றி
ஆக்கம்
தி.திபாகரன்

0 Responses to தமிழீழத்தில் இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்ட இயற்கைவள அழிவுகள்