தமிழீழ விடுதலைப் புலிகளின அரசியல் பிரிவு முக்கியஸ்தர்கள் படுகொலை தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசாங்கத் தரப்பிற்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
சரணடைய முனைந்தவர்களை படுகொலை செய்தமை சர்வதேச மனிதாபிமான விதிமுறைகளுக்கு முரணானது என்பதால் அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சன்டே லீடர் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் பாதுகாப்பு செயலாளர் கோட்பாய ராஜபக்சிவின் உத்தரவிற்கு அமைவாகவே சரணடைய முனைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கடும் விசனமடைந்துள்ளனர்.
நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதும் தனது கருத்தை மீள உறுதிப்படுத்திய சரத் பொன்சேகா தனக்கு குறிப்பிட்ட விடயத்தை ஊடகவியலாளர்களே உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்களத்தில் வெள்ளை கொடியடன் சரணடைய வருவோரை கொலை செய்தமை குறித்து நாடு வெட்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் இந்த கருத்தானது ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்பிலும் அதனை வழிநடத்திய அரசாங்கம் தொடர்பிலும் பல்வேறு கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தத்தை வழிநடத்தியவர் என்ற வகையில் சரத் பொன்சேகாவின் கருத்தை நிராகரிக்கவோ உண்மைக்கு புறம்பானது என்று மறதலிக்கவோ முடியாது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே நோர்வே அனுசரணையாளர்கள் ,சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியனவும் இந்த சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகாவின் கூற்றினை உறுதிப்படுத்தும் விதமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்தால் அரசாங்கத் தரப்பிற்கு கடும் நெருக்கடி