மூவர் உயர்மட்டக் குழுவின் புதுடில்லி விஜயத்தின் போது..
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு இந்தியாவிடம் கையளித்திருப்பதாக நம்பிக்கையாக அறியவந்தது.
இலங்கை அரசின் உயர்மட்டக்குழு கடந்த வாரத்தில் புதன்,வியாழக்கிழமைகளில் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே இந்த இரண்டு பக்க ஆவணம் புதுடில்லி அதிகார வர்க்கத்திடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அவரின் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ, மற்றொரு சகோதரரும் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர்மட்டக்குழுவே இந்த ஆவணத்தைப் புதுடில்லியில் கையளித்திருக்கின்றது.
இந்த ஆவணத்தின் உள்ளடக்கம் பகிரங்கமாவது தற்போதைய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுவதால், இது பற்றிய தகவலைப் பகிரங்கப்படுத்துவதில்லை என இரு தரப்புகளும் இணங்கிக்கொண்டன என்றும் அறியவந்தது. எனினும், மேற்படி குழுவின் புதுடில்லி விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் "இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிக் கொண்டன" என்று மட்டும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த இருபக்க ஆவணத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிரும் வகையில் தான் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள உத்தேச விவரங்களின் அடிப்படைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பு கட்டமைப்பு ரீதியாக மேலோட்டமாக குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் என்ன, அவை குறித்து இந்தியத் தரப்பு திருப்தியடைந்துள்ளதா என்பவை குறித்து ஏதும் தெரியவரவில்லை.

0 Responses to அதிகாரப் பகிர்வுத் திட்ட அடிப்படையை இந்தியாவிடம் கையளித்தது இலங்கை அரசு