அரச தலைவர் மகிந்த பங்கேற்கும் பிரசார கூட்டமொன்றில் அவருக்கு எந்த காயமும் ஏற்படாதவாறு குண்டுவெடிப்பு ஒன்றினை மேற்கொண்டு பொன்சேகாவுக்கு எதிரான பிரசார அலையை உருவாக்கவும் மகிந்தவுக்கு அனுதாபத்தை தேடிக்கொள்ளவும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய தரப்பினர் ஆலோசித்துவருவதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களிலிருந்து செய்தி கசிந்துள்ளது.
அரச தலைவர் தேர்தல் முன்னெடுப்புக்களின்போது மகிந்த மீது மக்களின் அனுதாபத்தை வென்றெடுக்கக் கூடிய பயங்கரவாத சூட்சுமங்கள் குறித்து அரச தலைவர் பாதுகாப்பு ஆலோசனைப் பிரிவுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவின் கீழ் இதுகுறித்து விசேட செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் மகிந்த பங்கேற்கும் கூட்டத்தில் குண்டொன்றை வெடிக்கச் செய்தால் ஏற்படக் கூடிய பிரதிபலன்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்றும்
இந்த பேச்சுக்களில் போது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர், இராணுவத்தின் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

0 Responses to மகிந்தவின் கூட்டத்தில் குண்டுவெடிக்கவைத்து அனுதாபம் தேட கோத்தபாய தரப்பு ஆலோசனை