நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து நேரடி விவாதமொன்றுக்கு வருமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷவை அழைப்பதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்திருப்பதாக சரத் பொன்சேகா அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தலுக்கான ஊடகப் பிரிவு நேற்றுமுன்தினம் திறந்துவைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற பிரசார மற்றும் ஊடகக் குழுக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காக அதிகாரியொருவரையும் நியமிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நேரடி விவாதத்தின் போது எவரும் 'ரெலிபொம்டர்' சாதனத்தைப் பயன்படுத்த முடியாது என்ற நிபந்தனை முன்வைக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட ரவி கருணாநாயக்க யோசனை தெரிவித்துள்ளார்.

0 Responses to மகிந்தவை பகிரங்க விவாதத்துக்கு அழைக்க பொன்சேகா முடிவு