அடுத்த சில தினங்களில் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க ஆகியோரை கொலை செய்து அந்த கொலைப்பழியை ஜெனரல் சரத் பொன்சேகா மீது சுமத்தும் திட்டம் ஒன்று விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அரச தலைவர் மகிந்தவின் உத்தரவின் பேரில் ஹட்சன் சமரசிங்க மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோர் தற்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தினமும் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடுமையாக வானொலி மூலம் நேரடியாக விமர்சிக்கும் பொறுப்பு ஹட்சன் சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகளின் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இவர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் இவர்கள் இருவரும் இரவு நேர களியாட்ட விடுதிகளில் பாதுகாப்பற்ற வகையில் நடமாடி வருவதால், இவர்கள் கொலை செய்யும் குழுவினரின் இலக்காக மாற வாய்ப்புள்ளதாகவும் இவர்களை கொலை செய்து விட்டு அந்த பழியை சரத் பொன்சேகாவின் மீது சுமத்த சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to கொலைப் பழியை பொன்சேகா மீது போட திட்டம்?