Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரச ஊடகங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அடிப்படை மனித உரிமைகள் வழக்கு பதிவு செய்துள்ளார். தனக்கு எதிராகவும் மகிந்தவுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டும் பிரசாரங்களுக்கு எதிராகவே பொன்சேகா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அரச ஊடகங்களான ஏரிக்கரை பத்திரிகைகள் மற்றும் ரூபவாஹினி, .ரி.என். தொலைக்காட்சிகள், சிறிலங்கா ஒலி பரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வைகயிலான செய்திகளையே தொடர்ந்தும் வெளியிட்டுவருவதால் தனது தேர்தல் பிரசாரத்துக்கு அது மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்துவதாகவும் -

தேர்தல் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரான மகிந்தவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுவருவதால் தேர்தல் விதிகளின் பிரகாரம் இது பாரபட்சமான செயல் என்றும் -

அரச ஊடகங்களை குறிப்பிட்ட நபரின் பிரசார இயந்திரமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் பொன்சேகா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரச ஊடகங்களுக்கு எதிராக பொன்சேகா வழக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com