Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசின் கொள்கை மற்றும் அதன் ஊழல், மோசடிகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பகிரங்கத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில்..

ஈடுபடத்தான் தயார் என்று ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றுக் கூறினார்.

கொழும்பில் நேற்று சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகள் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜனாதிபதியுடனான பகிரங்க விவாதத்திற்கு பொன்சேகா இணக்கம் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பொன்சேகா கூறியவை வருமாறு:

அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க நான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். ஊழல், மோசடிகளை இல்லாதொழித்தல், ஜனநாய கத்தை நிலைநாட்டுதல், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குதல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் தான் நான் தேர்தலில் குதித்துள்ளேன்.

மக்கள் இப்போது அனுபவிக்கும் பொருளாதாரப் பிரச்சினையில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இப்பிரச்சினைக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம். ஊழல், மோசடிகள் காரணமாகப் பொருள்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று யுத்த வெற்றி "கட்அவுட்"களுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின்சாரக் கம்பத்திலும் யுத்த வெற்றியைத் தெரிவிக்கும் "கட் அவுட்" கள்தான் காணப்படுகின்றன. என்றார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க அரசின் கொள்கை, கோட் பாட்டு விடயங்கள் தொடர்பாக பொன்சேகாவுடன் பகிரங்க தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஈடுபட வருமாறு ஜனாதிபதிக்குச் சவால் விடுத்தார். அப்போது அமர்ந்திருந்த சரத் பொன் சேகா ஜனாதிபதியுடனான விவாதத்திற்குத் தான் எப்போதும் தயார் என்றார்.

0 Responses to ராஜபக்ஷவுடன் பகிரங்க விவாதம் நடத்துவதற்கு பொன்சேகா தயாராம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com