Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர் என்று பொய்க்குற்றச்சாட்டினை முன்வைத்ததன் மூலம் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது நாட்டுக்கும் படையினருக்கும் மிகப்பெரிய துரோகமிழைத்தவிட்டார் என்று சீறி சினந்துள்ளார் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி வெளியாகி உடனடியாகவே நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசர ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டிய அமைச்சர் பொன்சேகாவின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - தனிப்பட்ட விரோதங்களுக்காக நாட்டின் படையினருக்கு இழுக்கு ஏற்படுத்தியிருக்கிறார் பொன்சேகா. தனக்கு பக்கபலமாக பணி புரிந்த படையினரை இவ்வளவு கேவலமான முறையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சிறிலங்கா படையினர் மிகவும் ஒழுக்கத்துடனும் பொறுமையுடனும் மேற்கொண்ட போரினால் ஏற்பட்டுள்ள அமைதியை இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எந்த போர்க்குற்றத்தையும் இழைக்காது மக்களை காப்பாற்றிய ஒப்பற்ற வீரர்கள் எமது படையினர். பொன்சேகா குற்றஞ்சாட்டுவதைப்போல படைநடவடிக்கை இடம்பெற்றிருந்தால், தயா மாஸ்டர், ஜோரஜ் மாஸ்டர் போன்றவர்களையோ ஏன் பிரபாகரனது பொற்றோரையோ பாதுகாப்பாக மீட்டிருக்கமுடியுமா? அவர்கள் இன்று மிகவும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழந்துகொண்டிருக்கிறார்கள்.

அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மேற்கொள்பவர்கள் தமது பணியை தொடர்ந்துகொண்டுதானிருப்பார்கள். இப்படியாக அறிக்கை ஒன்றை அண்மையில் அமெரிக்கா விடுத்தபோது, அதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரச தலைவர் மகிந்த, ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் என்பதை மறந்துவிடவேண்டாம்.

- என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தான் வளர்த்த படையினருக்கே துரோகமிழைத்துவிட்டார் பொன்சேகா: சிறிலங்கா அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com