Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆயுத விமானத்துடன் கைது செய்யப்பட்ட ஐவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் ஆறு மணிநேரம் தாய்லாந்து காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டனர். முதலில் எந்த தகவலையும் வெளியிடாத ஐவரும் பல மணி நேரத்துக்கு பின்னரே வாய் திறந்தார் என்று விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி "பாங்கொக் போஸ்ட்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

விமானம் உக்ரெய்னிலிருந்து புறப்பட்டதாகவும் வடகொரியாவுக்கு செல்வதற்கு முன்னர் அஸர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபுகள் இராச்சியம் ஆகியவற்றில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியதாவும் அடுத்ததாக சிறிலங்காவில் தரையிறங்குவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் -

தங்களது பயணத்தின்படி வடகொரியாவில் ஏற்றிய பொருட்களை சிறிலங்காவிலும் மத்திய கிழக்கு நாடொன்றிலும் இறக்கிவிட்டு அதன் பின்னர் உக்ரெய்ன் திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும் விமான ஓட்டி - ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் ஊடாக - தெரிவித்துள்ளார்.

விமானத்தில் என்ன பொருட்கள் எற்றப்பட்டன என்பது குறித்து தமக்கு எதுவுமே தெரியாது என்று ஐவரும் கூறியுள்ளனர். ஐவருமே ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில் நால்வர் கஸகஸ்தான் கடவுச்சீட்டும் ஒருவர் பிலரூஸ் கடவுச்சீட்டும் வைத்திருந்தனர்.

- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விமானத்துடன் கைதான ஐவர்: ஞாயிறன்று வெளியிட்ட தகவல்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com