தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை முற்றாக கைவிடப்போவதில்லை என்று எதிர் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பெயரளவிற்கான ஜனாதிபதியாக தன்னால் பதவி வகிக்க முடியாது என்றும் ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களை தான் தொடர்ந்தும் அனுபவிக்கவே விரும்புவதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே சரத் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.
எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற பிரதான அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதற்கு முக்கிய காரணம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக அவர் வழங்கிய வாக்குறதியே என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது சரத் பொன்சோக தெரிவித்துள்ள கருத்தானது அவர் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகிக்கவே விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Responses to ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களைக் கைவிடப்போவதில்லை - சரத்பொன்சேகா