Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

1977ல் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு இலங்கையில் தமிழ்மக்கள் வழங்கிய தமது ஏகோபித்த தீர்பினை மீள் உறுதிப்படுத்தும் கருத்துக் கணிப்பு வாக்களிப்பு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 12ம்,13ம் திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியல நடைபெறப்போவதை அறிந்திருப்பீர்கள். இன்னும் அறியாதோருக்கு இத்தால் அறியவும் தருகின்றோம்.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் விருப்பம் மட்டுமே என்று உண்மைக்கு புறம்பாக கூறி, நியாயமானதும், ஈழத்தமிழரின் மிக நீண்ட காலப்போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய தமிழர்களின் சுதந்திரத்தையும், இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருவதாகவும், உண்மைக்கு புறம்பான மாறுபட்ட செய்திகளும,; கருத்துக்களையும,; பரவலடையச்செய்வதோடு ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடன் செயற்பாடுகளும், இந்த வரலாற்றுக்கடமைக்கு ஒத்துழையாமையும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வகையில் தமிழ்ப்பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான எமது சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி தமிழ் மக்களின் பெரு விருப்பும் அதுவே என்பதை உலகிற்கு தெளிவாக பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழர்களின் தேசிய அரசியற் போக்கை தீர்மானிக்கும் காலத்தின் தேவைகருதிய முன்னெடுப்பாகும்.

எனவே இந்த அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்து வெற்றியடையச் செய்யவேண்டிய மிகபெரிய பொறுப்;பு ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்பேசும் மக்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்படுகின்ற அனைத்து அமைப்புகளுக்கும் தலையான கடமையாகவும் உள்ளது. ஆகையினால் இவ் அமைப்புகள் காலத்தின் தேவையையை, கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும்.

இந்தவகையில் இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் எமது முழுமையான பங்களிப்பை, அர்பணிப்புடன் விட்டுக்கொடுப்புடனும் தொடர்ந்து செயற்படுத்துவோம்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
இளையோர் அமைப்பு
பெண்கள் அமைப்பு
வர்த்தக சங்கம்
விளையாட்டுத்துறை
கலைபண்பாட்டுக் கழகம்
தமிழ் கல்வி மேம்பாட்டுப் பிரிவு,
தமிழர் தொழிற்சங்கம்,
தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு

0 Responses to பிரான்சில் தமிழரின் தாகத்தை வெற்றியடையச் செய்வோம்!!! தமிழ் அமைப்புக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com