முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழினத்துரோகியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டாதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் உட்பட 4 தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு நமது இயக்கத்தவர்கள் மீது போட்டுள்ள பொய் வழக்கினைத் திரும்பப் பெறக் கோரியும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள மெமோரியல் அரங்கு முன்பு நாம் தமிழர் இயக்கம் சார்பில் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது என்று நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



0 Responses to சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்