யாழ் பலாலி வீதி தபால் கட்டைச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா படைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (09.10.2009) அதிகாலை வேளையில் தபால் கட்டைச் சந்தியை அண்டிய பகுதியில் உணரப்பட்ட துப்பாக்கி வேட்டொலியை அடுத்து, அங்கு விரைந்த சிறீலங்கா தரைப்படையினரும், காவல்துறையினரும் தமது சகா ஒருவரின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில், குருதி வெள்ளத்தில் சிறீலங்கா படைக் காவலரின் சடலம் காணப்பட்டதாக குடிசார் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



0 Responses to பலாலி வீதியில் துப்பாக்கிச் சூடு