Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலையகப்பகுதியின் தேர்தல் பரப்புரை பணிகளுக்காக அங்கு பயணம் செய்த அமைச்சர் முரளிதரன், தானும் வடிவேல் சுரேசும் மகிந்தவின் செல்லப்பிள்ளைகள் என பெருமைபட்டுக்கொண்டார்.

மலையகத்தின் பசறை பகுதிக்கு சென்ற அவர் அங்கு தமிழ் மக்களை சந்தித்து உரையாடினார். சிங்களவர்கள் இந்நாட்டில் 82 விழுக்காடாக இருப்பதால் தேசிய அரசியல் மூலமே தமிழ்மக்களுக்கான தீர்வை காணமுடியும் என தெரிவித்தார்.

தமிழர்கள் என்ன செய்தாலும் ஒரு அரச தலைவராக வரமுடியாது எனவும் அதனால் தான் மகிந்தவுடன் இணைந்துகொண்டதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் பெரிய கட்சியான சுதந்திர கட்சியின் உப தலைவராக வந்தததையிட்டு தான் பெருமைப்பட்டுக் கொள்வதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

0 Responses to நாங்கள் மகிந்தவின் செல்லப்பிள்ளைகள்: கருணா(ய்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com