மேலும், மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, மூத்ததளபதி கிட்டண்ணா அவருடன் வீரச்சாவடைந்த 9 மாவீரர்கள் உட்பட இதுவரை வீரச்சாவடைந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் ஈகமானது சுதந்திரத் தமிழீழத்தனியரசை அமைப்பதற்கே ஆகும். இத்தீர்வே ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழவழியேற்படுத்தும். இதைத்தவிர வேறெந்த அரைகுறை அரசியற்தீர்வும் ஈழத்தமிழர்களிற்கு நிரந்தரத்தீர்வாகாது எனவும் சனவரி 24 இல் நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை மீளவலியுறுத்தும் தேர்தலில், ஆம் என்பதற்கு முன்னால் புள்ளடியிட்டு தமிழர்களின் அரசியல்அபிலாசையை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவோம் என அங்கு நிகழ்த்தப்பட்ட நினைவுரையில் தெரிவிக்கப்பட்டது.
0 Responses to நெதர்லாந்தில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களிற்கான வணக்கநிகழ்வு