எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து தமிழ்மக்களின் வாக்குகளை பெற்றுத்தரவேண்டும் என்ற நிபந்தனையுடனேயே கடந்த எட்டு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுவிக்கப்பட்ட கூட்டமைப்பு எம்.பி. தற்போது மன்னார் வீதியில் உள்ள வட மாகாண ஆளுனரின் உத்தியோகபூர்வ வதிவிடம் அமைந்த பகுதியில் உள்ள பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்றும் -
விடுதலை செய்யப்பட்ட தன்னை மகிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய அரசு கோரியுள்ளது என்று தொலைபேசி மூலம் தெரிவித்தார் என்றும் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் விடுதலைப்புலிகள் நடத்திய விமான தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சதாசிவம் எம்.பியின் மகன் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 Responses to மகிந்தவுக்கு பிரசாரம் செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடனேயே சதாசிவம் எம்.பி. விடுதலை!