
இந்த நிகழ்வின் பேது, ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத் தலைவர் திரு. ந. கிருபானந்தன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம், தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனையை அடுத்து, நிகழ்விற்கு வருகை தந்திருந்த மக்கள், வீரத்தந்தை திரு வேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திரு உருவப்படத்திற்கும், தளபதி கிட்டு அவர்களின் திரு உருவப் படத்திற்கும் மெழுகு விளக்கு வணக்கம், மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
நிகழ்வில் மாதந்தையின் வரலாற்றுப் பார்வையும், நினைவுக் கவிதைகளும், தளபதி கிட்டு அவர்கள் உட்பட ஏனைய ஒன்பது போராளிகளின் நினைவுப் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்கப்பட்டு, உரிமைக் கோசத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.




0 Responses to பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் வீரத்தந்தைக்கு நினைவு வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)