
எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் -
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும்போது இந்திய மத்திய, தமிழக அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமான பரப்புக்களை தமிழ் கூட் டமைப்பு வெளியிடக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை இந்தியதரப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளமை குறித்தோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை இந்தியா பெற்றுத்தர தவறியுள்ளதாகவோ கூட்டமைப்பினர் பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தமிழ் கூட்டமைப்புக்கு இந்தியா உத்தரவு