Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேணல் கிட்டு ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 24-01-2010 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மெல்பேண் ரெறாறா மைதானத்தில், காலை 09 மணிக்கு அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் தமிழர் விளையாட்டு விழா ஆரம்பமானது. இந்நிகழ்வில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் பெருமளவானோர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். விளையாட்டு நிகழ்வில் தமிழர் உணவுகளும் விற்பனை செய்யப்பட்டன.

கிறிக்கற் விளையாட்டு போட்டிகள், சமநேரத்தில் மூன்று மைதானங்களில் நடைபெற்றன. 16 அணிகள் பங்குகொண்ட கிறிக்கற் விளையாட்டு போட்டியில் மெல்பேண் நைற்ஸ் கழகம் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

விளையாட்டில் வெற்றி பெற்றோருக்கான கேடயங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, இரவு 9 மணியளவில் விளையாட்டு விழா நிறைவுபெற்றது.











0 Responses to கேணல் கிட்டு ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா: மெல்பேண் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com