Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகில் முதல் முறையாக ஒரு நாட்டின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் அந்நாட்டு அரசினால் காட்டிக்கொடுக்கப்பட்ட சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக வடமத்திய மாகாணத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரொஹன கமகே தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் கபில ஹெந்தாவித்தாரனவை ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொள்ளச் செய்து, அரசு மீது எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அறிக்கை விடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பாரதூரமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னர் ஆட்சியிலிருந்து எந்த அரசாங்கமும் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் பாரதூரமான அச்சுறுத்தல். தற்போதைய அரசு தேசியப் பாதுகாப்பை செல்லாக் காசாக மதித்து, தேர்தலில் வாக்குகள் சிலவற்றை சேகரிக்கும் நோக்கிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நோக்கிலும் இந்தப் பாரிய காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரகசியங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளன. இந்த நடவடிக்கை மிகப்பாரிய காட்டிக்கொடுப்பென மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தினர் உணராதிருக்கக்கூடும். ஆனால், மக்கள் இந்த விடயத்தையும் தேர்தலின் போது சுயபுத்தியுடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும் எனவும் ரோஹன கமகே மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இராணுவ புலனாய்வு பிரிவு தலைவரை காட்டிக்கொடுத்த சிறிலங்கா அரசு: ஐ.தே.க. குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com