Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்பாணத்தில் மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்தில் இருந்து வருகை தந்த இசைத்துறையைச் சேர்ந்த பாடகர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் என எமது யாழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த தைப்பொல்கல் நாளன்று சிறீலங்கா அரச ஊடகங்களான லேக்கவுஸ் நிறுவனத்தினுள் அங்கம் வகிக்கும் தினகரன் நாளேடு பொல்கல் நாளையொட்டி இசை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

துரையப்பா விளையாட்டரங்களில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சிக்கு துணை இராணுவக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த சிறப்பு அதிதியாக வரவழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த பாடகர்களான மாணிக்கம் விநாயகம், சிறீலேகா, பார்த்தசாரதி போன்றோர் மகிந்தவின் தேர்தல் பரப்புரை நிகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சி என மக்கள் வரைவழைக்கப்பட்டு மக்களுக்கு மகிந்த ராஜபக்சவின் படம் தாங்கிய நாட்காட்டிகள் வழங்கப்பட்டு, தேர்தல் துண்டுப் பிரசரங்களுகம் வழங்கப்பட்டுள்ளன.

மாணிக்கம் விநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்து மதிப்பளித்துள்ளார். இதேபோன்று ஏனைய பாடர்களுக்கும் யாழ்மாவட்ட முதல்வர் பொன்னாடை போர்த்து மதிப்பளித்தார்.

நிகழ்வானது மதுபோதை அருந்தப்பட்டு, பாட்டும், ஆட்டமும், கும்மாளமுகாகவே இருந்துள்ளது. வயது குறைந்த சிறுவர் சிறுமிகள் மிக மோசமான கலாச்சார சீரழிவுக்கு நோக்கி அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்படும் நிகழ்வுகள் இருப்பதாக எமது நிருபர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.


0 Responses to யாழில் மறைமுகமான மகிந்தவின் தேர்தல் பரைப்புரைக்கு தமிழக திரையிசைப் பாடர்கள் வரவழைப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com