இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலளார் நிருபமா ராவுடன் நேற்று பேச்சுவார்தைகளை நடத்தியுள்ளனர்.
சுமார் ஓரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் நிலவரங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலை குறித்து கூட்டமைப்பினர் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் விளக்கி கூறியுள்ளனர்.
கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன்,மாவை சேனாதிராஜா,சுரேஸ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றும் இந்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் சிலருடன் கூட்டமைப்பினர் பேச்சுவார்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நிருபமா ராவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு!