Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழினத்தின் தானைத் தலைவனாம் எமது தேசியத்தலைவர் அவர்களை பெற்று வளர்த்து தமிழ்த்தாய்க்கும் தமிழினத்திற்கும் தத்துக்கொடுத்த ஈகத்தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு சுவிஸ் சென்காளன் தமிழர் இல்லத்தினரால் 10.01.2010 ஞாயிறு அன்று நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்துக்கு தமிழர் இல்ல செயர்பாட்டாளர் திரு.கோ.விமலநாதன் அவர்களின் ஈகச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து வருகை தந்திருந்த தமிழீழ உணர்வாளர்களினால் அன்னாரின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வும் கவிதாஞ்சலியும் நடைபெற்றது. இந்நிகழ்வானது மண்டபம் நிறைந்த தமீழீழ உணர்வாளர்களோடு மிகவும் உளச்சிரத்தையோடு நடைபெற்றதைக் காணமுடிந்தது. தமிழனை வேரோடு அழித்தொழித்து வரலாற்றை மாற்றிவிட துடிக்கம் வல்லரசுகளும் வால்பிடிகளும் செய்யும் திருகுதாளங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்பதை எம்மவர்கள் நிரூபிக்க தொடங்கிவிட்டார்கள்



0 Responses to சுவிஸ் சென்காளன் மாநிலத்தில் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com