சுதந்திரத்திரமான வாழ்வுக்காக முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் போராட்டத்திற்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. உரிய தீர்வுகள் தமிழர்களுக்கு முன்வைக்கப்படாவிட்டால் மீண்டும் விடுதலைப் போராட்டம் தன்னெழுச்சியாக உருவாகுமென அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர் சாம்பவி தெரிவித்துள்ளார்.இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் புலத்து தமிழர்களை பொறுத்தவரை தமிழர்களின் ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளுக்காக பெரும்பாலான தமிழர்கள் ஒன்றுதிரண்டிருப்பதாகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே ஏனைய கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்ட அவர் அனைத்து சமூகங்களிலும் அவ்வாறானவர்கள் இருப்பது வழமைதான எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் பற்றி விளக்கமளித்த அவர், சிறிலங்காவில் பெரியளவிலான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலன்றி இலங்கை தீவில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்நேர்காணலின் முழுமையான வடிவத்தை இங்கு வாசிக்கலாம்.
http://www.lankanewsweb.com/EN_Behind_the_scence/BTS_10_01_03_001.html
http://www.lankanewsweb.com/Sinhala/Behind_the_scence/BTS_09_12_21_001.html



0 Responses to இலங்கை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தாலன்றி அமைதி திரும்பபோவதில்லை: அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பேச்சாளர்