பதிந்தவர்:
தம்பியன்
18 January 2010
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான பங்கினை வகிக்க விரும்புவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்திய வெளியறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படுவதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
0 Responses to இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க விருப்பமாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன்