![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglUvV6eV41zi8z9tFZrFQfeTICrAiJGpq7VHlmEoGKssA3UFQhD6qg85GxMLCaBbYXc2dJJg3zlXSaHEI9aWXNTGE-FKm1-y-dSiQd-Mp_LOBjaoBIvn6f_FZuKCdH-FU17ufVk9dpPikm/s200/Mangala_Samaraweera.jpg)
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் வன்னியில் யுத்தம் தீவிரமடைந்த போது பொதுமக்களை இலக்கு வைத்த கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபை விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தாங்கள் கனரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்திக் கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததது.
எனினும் ஏப்பிரல் மாதம் வரை கனரக ஆயுதங்கள் யுத்த களத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தற்போது தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளுக்கு அமைவாக கனரக ஆயுதங்களின் பாவனையை கைவிடுவதாக அரசாங்கம் அறிவித்ததாகவும் அதன் மூலமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கு பெபரவரி மாதம் வழங்கிய வாக்குறுதியை சிறுலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஏப்பிரல் மாதம் வரை கனரக ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் வன்னிக் களமுனையில் பயன்படுத்தியமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் இதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையினையும் ஏமாற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நன்றி: பதிவு
0 Responses to இன அழிப்பு யுத்தத்தின் போது அரசாங்கம் ஐநாவை ஏமாற்றியுள்ளமை: மங்கள சமரவீர